கல்லூரி துவக்க விழா

     சென்னை உயர் நீதி மன்ற நீதியரசர் மாண்புமிகு திரு.சி.டி.செல்வம் அவர்கள் தலைமையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள் முன்னிலையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எம்.இராமனாதன் அவர்கள் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். மதுரை வருமானவரி ஆணையாளர் உயர்திரு.எம்.கிருட்டிணசாமி ஐ.ஆர்.எஸ். அவர்கள் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

     தமிழ் இசைக் கல்லூரி ஆரம்பித்த ஆண்டிலேயே எண்பது மாணாக்கர்கள் பெருமளவில் திரண்டு வந்து இக்கல்லூரியின் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு வகுப்புகளில் சேர்ந்தனர்

கல்லூரியின் இசை / நடன வகுப்புகள் தொடக்க விழா:

     கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம், வயலின், மற்றும் பரத நாட்டியம், ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு வருடம் 250 மணி முதல் 300 மணி நேரம் வரை மிகச் சிறந்த ஆசிரியர்களைக்கொண்டு மற்றும் உரை நூலகம் மூலம் இசை பயிற்றுவித்தல் ,மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நாளது நந்தன ஆண்டு வைகாசித் திங்கள் 20 ஆம் நாள் (02.06.2012 ) சனிக்கிழமை மாலை இசை/ நடன வகுப்புகள் இசைக் கல்லூரியின் செயலாளர் திரு.ஆறு.இராமசுவாமி அவர்கள் முன்னிலையில் துவங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.மல்லிகா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.மனித்த்தேனீ திரு. ரா.சொக்கலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கல்லூரி நிர்வாக சபை


Dr.A.C.முத்தையா
Chairmen
RM.சோமசுந்தரம்
Secretary
s. மோகன் காந்தி சோ.சோ.மீ.சுந்தரம் Dr.S.மல்லிகா
Committee Committee Committee