நுழைவு வாயில்
அரண்மனை போன்ற ராஜா முத்தையா மன்றம் அதன் நுழைவாயில் நுழைவோரின் கண்ணைக் கவர்ந்து இழுக்கும் வண்ணம் பண்டைத் தமிழரின் சிற்ப சாத்திரத்தின் படி படியும், உட்புறம் வரவேற்பு அரங்கு 80 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்ட 3200 சதுர அடி பரப்பளவு கொண்ட வரவேற்பறையை கொண்டது.
அரங்கம்
உட்புற அமைப்பு நவீன வசதிகளுடன் கூடிய கலை எழில் தவழும் கவின்பெறு மாளிகையாக அமைந்துள்ள அரங்கம் முழுவதும் குளீரூட்டப்பட்ட வசதியுடன் அரங்கம் அமையப் பெற்றது.அரங்கத்தில் 1050 இருக்கைகள் கொண்டது. இருக்கைகள் நிரந்தரமாக அமையப் பெற்றது.இருக்கைகள் அமைந்துள்ள தளம் சாய் தளமாக அமைக்கப்பட்டு ,இருக்கைகள் பொருத்தப்பட்டு எங்கிருந்து பார்த்தாலும் அரங்கம் மறைக்காதவாறு அமையப் பெற்றது.
அரங்கம் 80 அடி அகலமும், 110 அடி நீளமும் மொத்தம் 8800 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. அரங்கத்தின் நுழைவாயில் அரங்கத்தின் நீளத்தை சரி சமமாக பிரிக்கப்பட்டு மூன்று நுழைவு வாயில் அரங்கத்தின் வலது புறமும், இடது புறம் மூன்று நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
அரங்க மேடை அரங்க மேடை சாத்திரப்படி கிழக்கு நோக்கி அமையப் பெற்றது. நீளம் 47 அடியும், அகலம் 96 அடியும் மொத்தம் 4512 சதுர அடி பரப்பளவைக் கொண்டது.அரங்க மேடை தேக்கு மரத்தினால் ஆனது.
அறைகள்
அரங்கத்தினுள் இரண்டு சாதாரண அறைகளும், மூன்று குளிர் சாதன வசதி கொண்ட அறைகளும் உள்ளது.