ராணி மெய்யம்மை மன்றம் 70 அடி நீளமும், 70 அடி அகலமும் மொத்தம் 4900 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ராணி மெய்யம்மை மன்றம் ராஜா முத்தையா மன்றத்தில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு சாப்பாட்டுக் கூடமாகவும், பயன் படுத்தப் படுகிறது. மேலும் கல்வி கண்காட்சிகளுக்கும் , கருத்தரங்கம் ஆகியவற்றிற்கு ஸ்டால்கள் அமைத்து பயன்படுத்திக் கொள்ளும் வசதியுடன் அமையப் பெற்றது.
ராணி மெய்யம்மை மன்றத்தில் ஒரு பகுதி குளிரூட்டப்பட்ட வசதியுடன் 40 அடி நீளமும், 20 அடி அகலமும் மொத்தம் 800 சதுர அடி பரப்பளவைக்கொண்டது. இந்த அரங்கத்தை வி.ஐ.பி.அரங்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
வசதிகள் அரங்கத்தில் நடைபெறும் நிக்ழ்ச்சிகளுக்கு வரக்கூடிய இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மன்றத்தின் வலப் புறமும், இடப் புறமும், நிறுத்துவதற்கு போதுமான இட வசதி உள்ளது.
முதியோர்கள், உடல் ஊன முற்றோர், மற்றும், பெரியோர்கள், பிரபலமானவர்கள், இவர்கள் அரங்கத்தில் நுழைவதற்கு ஏதுவாக மன்றத்தின் இடது புறம் சாய்வு தளம் அமைக்கப் பட்டுள்ளது.
எளிதாக நெருக்கடி இல்லாமல் வெளியே செல்ல மூன்று வாயில்கள் உள்ளன.
மின் தடை ஏற்படும் போதும், குளிர் சாதன வசதிக்கும் இலவசமாக ஜெனரேட்டர் வசதி(டீசல் தவிர்த்து)
அரங்கத்தில் சொகுசான இருக்கை வசதி கொண்டது.
ந்¢கழ்ச்சிகளுக்கு (மெல்லிசை நிகழ்ச்சி தவிர) தேவைப்படும் ஒலி பெருக்கி சாதன வசதி கொண்டது.