கல்லூரி முதல்வர்

     முனைவர் எஸ்.மல்லிகா எம்.மியுசிக்,பி.எச்டி
      கல்லூரியின் முதல்வர்

     கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.மல்லிகா எம்.மியுசிக்,பி.எச்டி, அவர்கள் காரைக்குடியில் பிரபல இசைக்குடும்பப் பரம்பரையில் பிறந்தவர். இவர் மதுரையில் பி.ஏ,(வரலாறு) இளங்கலை பட்டமும், இசையில் இளங்கலை,மற்றும் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். இசையில் பி.எச்டி முனைவர் பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பெற்றுள்ளார்.

     மதுரை ஸத்குரு சங்கீத சமாஜத்தில் 30 ஆண்டுகள் இணைப் பேராசிரியராக (வீணை) சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். இவர் ஆல் இந்தியா ரேடியோவின் கிரேடட் ஆர்டிஸ்ட். ஸத்குரு சங்கீத வித்யாலயத்தில் துறைத் தலைவராகவும்,சிறப்பாக பணியாற்றியவர்கள். இவர் 1000 மேடைக் கச்சேரிகளுக்கு மேல் வீணை கச்சேரி நிகழ்த்தி இருக்கின்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் நவராத்திரி கலை விழாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 108 வீணை வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியதோடு தொடர்ந்து 15 ஆண்டுகளாக 108 வீணை வழிபாடு நடத்தி வருகின்றார். இவரது சீரிய தலைமையில் ஆந்திரா அகாடமியும், திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து நடத்திய யுவலயம் நிகழ்ச்சியில் பங்கு பெற்று நமது கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

     இவர் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கச்சேரிகள் நிகழ்த்தி இருக்கின்றார். பல வெளி நாடுகளிலும் வீணை கச்சேரி நிகழ்த்தியிருக்கின்றார். 2012 ஆம் ஆண்டு சி.ஐ.ஐ. விருதும் பெற்றுள்ளார்.

     17.01.2015 ல் ஸத்குரு சங்கீத வித்யாலயத்தில் நடைபெற்ற 51 வீணை நிகழ்ச்சியில் முதல்வர் எஸ்.மல்லிகா அவர்கள் தலைமையில் நமது கல்லூரி மாணவ-மாணவிகள் இசைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

     10.02.2015 அன்று நமது கல்லூரியின் முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.மல்லிகா அவர்களின் இசைக் கலையைப் பாராட்டி மதுரை ஸத்குரு சங்கீத சமாஜம் இவருக்கு “ மதுர கலா மணி” என்ற விருதினை வழங்கி நமது கல்லூரிக்கும், நமது கல்லூரி முதல்வருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.தமிழ்நாடு,பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திராவில் அமைந்துள்ள 12 பல்கலைக் கழகங்களில் அங்கத்தினர், மற்றும் பாடத்திட்ட அறிஞர் ஆக பணியாற்றி வருபவர். இலங்கையில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில் ஆலோசகராக பணியாற்றி வருபவர். இவரின் கீழ் 9 பேர் பி.எச்டி முனைவர் பட்டப்படிப்புக்காக பதிவு செய்து 6 பேர் முடித்து ஆய்வேடுகளை அளித்து விட்டார்கள்

     இக்கல்லூரி தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 2015 - 2016 கல்வியாண்டுமுதல் பல பட்டப் படிப்புகளை நடத்த உள்ளது